வேலை வேண்டுமா?- ரிசர்வ் வங்கியில் பணி; காலியிடங்கள் 199


இந்திய ரிசர்வ் வங்கியில் க்ரூப் பி பிரிவில், 199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு: 1. வேலையின் பெயர்: Officers inGrade 'B' (DR) - (General) கல்வித்தகுதி: 10,12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரியில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் போதும்) காலியிடங்கள்: 217 2. வேலையின் பெயர்: Officers in Grade 'B' (DR) - DEPRகல்வித்தகுதி: பொருளாதாரம் அல்லது பொருளாதாரம் தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். அல்லது எம்பிஏ (நிதிப்பிரிவு) படிப்பில் 55% மதிப்பெண்கள். 3. வேலையின் பெயர்: Officers in Grade 'B' (DR) - DSIM கல்வித்தகுதி: பொருளியல் அல்லது பொருளியல் தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.

அல்லது கணிதம் முதுகலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்கள் 4. காலியிடங்கள்: 199 5. வயது வரம்பு: 01.08.2019-ல் 21முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். எம்பில் படித்தவர்களுக்கு 2 வருடங்களும் பிஎச்டி முடித்தவர்களுக்கு 4 வருடங்கள் தளர்வு வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். 6. சம்பளம்: ரூ.35,150 - ரூ. 77,208 7. தேர்வு முறை: 1. முதனிலைத் தேர்வு 2. முதன்மைத் தேர்வு 3. நேர்முகத் தேர்வு ஆன்லைன்எழுத்துத் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். எப்படி விண்ணப்பிப்பது? ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/rbigrbdsep19/?_ga=2.39950498.1079348801.1569671273-598418090.1561965683 என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் ரூ.850. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.100. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.09.2019 இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3766&_ga=2.216625302.1079348801.1569671273-598418090.1561965683 என்ற இணையதளத்தை அணுகலாம்.