குரூப் - 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நவம்பர் 6-இல் நேர்முகத் தேர்வு


குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-இல் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் - 2 பிரிவில் காலியாக இருந்த 1,338 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 11-இல் நடந்தது. இதன்பின், கடந்த பிப்ரவரியில் 14 ஆயிரத்து 797 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட வழக்கமாக ஓர் ஆண்டுக்கு மேலாகும். ஆனால், முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு எட்டு மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முதன்மை எழுத்துத் தேர்வில் 2 ஆயிரத்து 667 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-ஆம் தேதி முதல் 30-ஆம்
தேதி வரை நடைபெறவுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.http://www.tnpsc.gov.in/results/SEL_OT_GROUP_II_MWE_2K19_LIST.pdfhttp://www.tnpsc.gov.in/results.html