Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 23, 2019

வரலாற்றில் இன்று 23.10.2019

அக்டோபர் 23 (October 23) கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

கிமு 4004 – அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.
கிமு 42 – மார்க் அந்தோனி, ஆகுஸ்டஸ் ரோமப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டஸ் தற்கொலை செய்து கொண்டான்.
425 – மூன்றாம் வலன்டீனியன் ஆறாவது அகவையில் ரோமப் பேரரசன் ஆனான்.
1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.
1707 – பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.
1739 – பிரித்தானியப் பிரதமர் ரொபேர்ட் வால்போல் ஸ்பெயின் மீது போரை அறிவித்தார்.
1870 – பிரான்சின் மெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் பிரஷ்யா வெற்றியடைந்தது.
1906 – அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது காற்றை விடப் பாரமான வானூர்தியைப் பறக்க விட்டார்.
1911 – முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பாவிக்கப்பட்டது: இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.
1912 – முதலாம் பால்க்கன் போர்: சேர்பியாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1915 – நியூயோர்க் நகரில் 25,000-33,000 பெண்கள் வாக்குரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1917 – லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1941 – உக்ரேனின் ஒடேசா நகரில் 19,000 யூதர்கள், ருமேனிய இராணுவ அதிகாரி நிக்கலாய் டெலியானு தலைமையில் ருமேனியா மற்றும் ஜெர்மன் படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.


1942 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்துப் 12 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ரால்ஃப் ரைஞ்சர்என்ற பிரபலமான இசை மேதையும் அடங்குவார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத்தின் செம்படைகள் ஹங்கேரியை அடைந்தன.
1946 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.
1956 – ஹங்கேரியப் புரட்சி, 1956: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4இல் நசுக்கப்பட்டது.
1958 – நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.
1966 – ஐக்கிய நாடுகள் சபை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
1973 – சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்ற யோம் கிப்பூர் போர் ஐநாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.
1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – கம்யூனிச ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1991 – ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
1998 – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில் “அமைதிக்காக நிலம்” என்ற உடன்பாடு எட்டப்பட்டது.


2001 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரிஷ் குடியரசு இராணுவம் ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
2001 – அப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட் வெளியிடப்பட்டது.
2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.
2002 – மொஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்னிய தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
2004 – பிரேசில் VSB-30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.
2004 – வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் கொல்லப்பட்டு 2,200 பேர் படுகாயமடைந்தனர்.
2006 – இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

பிறப்புக்கள்

1920 – ஃவுஜித்தா, ஜப்பானிய வானிலை அறிஞர் (இ. 1998)
1948 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தாபகர் (இ. 2000)
1974 – அரவிந்த் அடிகா, இந்தியப் புதின எழுத்தாளர்

இறப்புகள்

கிமு 42 – மார்க்கஸ் புரூட்டஸ், ரோமப் பேரரசின் படைத்தலைவன் (பி. கிமு 85)
1986 – எட்வேர்ட் அடெல்பேர்ட் டொய்சி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1893)

சிறப்பு நாள்

ஹங்கேரி – தேசிய நாள்
வேதியியல் – மோல் நாள்