இன்று மழை வரும் 24 மாவட்டங்கள்!


சென்னை: அரபிக் கடலில், 'மஹா' புயல், உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில், 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 24: தென் மாவட்டங்கள் அனைத்திலும், இன்று கன மழை இருக்கக் கூடும். வட மாவட்டங்களில், ஆங்காங்கே மழை இருக்கும். என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம்,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை: மழை பெய்யும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பாக, முடிவெடுக்கும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சூழலுக்கேற்ப முடிவெடுப்பர் என, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.