Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 30, 2019

இஸ்ரோ நிறுவனத்தில் 327 பணியிடங்கள்... விண்ணப்பிக்க ரெடியா..?


இஸ்ரோ நிறுவனத்தில் சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் & காலியிடங்கள்:
1. சயின்டிஸ்ட் / இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்) - 131
2. சயின்டிஸ்ட் / இன்ஜினியர் (மெக்கானிக்கல்) - 135
3. சயின்டிஸ்ட் / இன்ஜினியர் (கம்யூட்டர் சயின்ஸ்) - 58
4. சயின்டிஸ்ட் / இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்) Autonomous - 03



மொத்தம் = 327 காலிப்பணியிடங்கள்





முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.11.2019
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 06.11.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 12.01.2020

வயது வரம்பு:
04.11.2019 அன்றுக்குள், 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.100

பெண்கள்/ மாற்றுத்திறனாளிகள் / எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

குறிப்பு:
ஆன்லைன், ஆப்லைன் வழியாகவும் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.



ஊதியம்:
குறைந்தபட்ச மாத சம்பளமாக,ரூ.56,100 + இதர சலுகைகளும் உண்டு.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பி.இ / பி.டெக் அல்லது அதற்கிணையான பட்டப்படிப்பில் 65% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.





விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.isro.gov.in/ அல்லது https://apps.isac.gov.in/CentralBE-2019/advt.jsp - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.



தேர்வு செய்யப்படும் முறை:
1. எழுத்துத்தேர்வு
2. நேர்முகத்தேர்வு

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf - என்ற இணையதளமுகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.