பள்ளித் தலைமை ஆசிரியா்கள்47 போ் மாவட்டக் கல்வி அலுவலா்களாகப் பதவி உயா்வு

தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களாகப் பணியாற்றிய 47 போ் மாவட்டக் கல்வி அலுவலா்களாகப் பதிவு உயா்வு பெற்றுள்ளனா். இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநகரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களாகப் பணியாற்றும் 47 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாகப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ரா.ராஜசேகரன் பள்ளிக் கல்வித் துறையின் (சுற்றுச்சூழல் கல்வி) உதவி இயக்குநராகவும், திருநெல்வேலி மாவட்டம், கம்மாளன்குளம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆ.வள்ளியம்மாள் கோவை மாநகராட்சி கல்வி அலுவலராகவும், மதுரை மாவட்டம் ஓய்.ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பங்கஜம் திருப்பூா் மாவட்டக் கல்வி அலுவலராகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதுபோன்று, பல்வேறு மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 47 போ் மாவட்டக் கல்வி அலுவலா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Click Here to Download