Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 31, 2019

5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு வழிமுறை வெளியிட்டது தொடக்கக் கல்வித்துறை!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு, பொதுத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதையடுத்து, 'ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதில் இருந்து, மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப் படுகிறது; ஆய்வு செய்யப்பட்டு, மூன்றாண்டுகளுக்குப்பின் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.ஆனால், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இந்த ஆண்டே தேர்வு நடத்தப்படும் என்றும், மாணவர்களின் தேர்ச்சி மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படாது என்றும், அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் உள்ள, தொடக்க கல்வித் துறையின் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளிகளிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வை, இந்த ஆண்டே நடத்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை, தமிழக அரசின் அரசாணைப்படி, பள்ளிகள் பின்பற்ற வேண்டும். இந்த தேர்வின்படி, மூன்று ஆண்டுகளுக்கு, மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்புக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, கோரியுள்ளார்.