மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி அறிவிப்பு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு.அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஐவடேகர் கூறினார்.


முன்பு இந்த அகவிலைப்படி 12 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் இப்போது உயர்த்திய 5 சதவிகிதத்தையும் சேர்த்து இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு படிக் காசு என்கிற டியர்னெஸ் அலவன்ஸ் 17 சதவிகிதம் வழங்கப்படும்.
மேலும், காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் 5300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.