8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!


தமிழக அரசிற்கு உட்பட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 63

கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

1.7.2019 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி பல்வாறு இருப்பதால், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து, தங்கள் வசதிக்கு ஏற்ற பகுதியில் உள்ள அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.