Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 10, 2019

`A' குரூப் ரத்தத்தை `O' குரூப்பாக மாற்றலாம்... வியப்பூட்டும் புதிய ஆராய்ச்சி!


விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்பாற்ற உலகம் முழுவதும் பல லட்சம் யூனிட் ரத்தம் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. திட்டமிட்ட அறுவை சிகிச்சை, திடீர் அறுவை சிகிச்சை, விபத்தில் காயம்பட்டவர்கள் என்று பலர் இதனால் பலன் அடைகின்றனர். இருந்தாலும் ரத்தத்துக்கு எப்போதும் தட்டுப்பாடு நீடித்துக்கொண்டேதான் இருக்கிறது.Blood vessels



ஒருவரிடமிருந்து தானம் பெறுவதால் மட்டுமே ரத்தத்தை மற்றவர்களுக்கு ஏற்ற முடியும். ஒருவருக்கு ரத்தம் ஏற்றும்போது அவருடைய குறிப்பிட்ட ரத்தப்பிரிவைத்தான் ஏற்ற வேண்டும். ரத்தப்பிரிவை மாற்றி ஏற்றினால் உயிர் போகுமளவுக்குக்கூட பிரச்னைகள் ஏற்படலாம். இதில் ஒரு பிரிவு மட்டும் விதிவிலக்கு. ஆனால் 'O' பாசிட்டிவ் பிரிவு ரத்தத்தை அனைவருக்கும் ஏற்ற முடியும். அதனால்தான் 'O' ரத்தப்பிரிவு கொண்டவர்களை' யுனிவர்சல் டோனர்' என்று அழைக்கிறோம்.



உலகம் முழுவதும் காணப்படும் ரத்தத்தின் தட்டுப்பாட்டைப் போக்க 'A' பிரிவு ரத்தத்தை 'O' பிரிவாக மாற்றும் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரத்தத்தில் A, B, AB, O ஆகிய ரத்தப்பிரிவுகள் உண்டு. இந்த ரத்தம் உடையவர்களின் சிவப்பணுக்களில் சர்க்கரை மூலக்கூறுகள் காணப்படும். இந்த மூலக்கூறுகள் ரத்த ஆன்டிஜென்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு ரத்தப் பிரிவு இருப்பவர்களுக்கு வேறு ரத்தத்தை ஏற்றும்போது இந்த ஆன்டிஜென்கள்தான் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி உயிரிழப்புவரை ஏற்படுத்தும். ஆனால் 'O' ரத்தப்பிரிவு கொண்டவர்களின் சிவப்பணுக்களில் இந்த ஆன்டிஜென்கள் இருக்காது.Research



அதனால் 'A' ரத்தப்பிரிவில் இருக்கும் ஆன்டிஜென்னைக் கரைக்கும் முறையைக் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் விதரி தலைமையிலான குழுவினர் நான்காண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறிந்துள்ளனர். இரைப்பையையும் குடலையும் இணைக்கும் நாளத்தில் (gut) ஒருவகை என்ற பாக்டீரியா செயல்படுகிறது. அதிலிருந்து உருவாகும் நொதிகளுக்கு ஆன்டிஜென்னைக் கரைக்கும் தன்மை உள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர். அந்த பாக்டீரியாவில் சிறிய அளவை 'A' ரத்தப்பிரிவில் செலுத்தும்போது அதிலிருக்கும் ஆன்டிஜென் கரைந்துவிடும். அதனால் 'A' பிரிவு ரத்தம் 'O' பிரிவாக மாறிவிடும்.



இந்த ஆராய்ச்சியின் மூலம் யுனிவர்சல் டோனரான 'O' ரத்தப்பிரிவின் கையிருப்பை, இரு மடங்காக உயர்த்த முடியும். அதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். ரத்தத்துக்கான தட்டுப்பாட்டையும் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.