முதுநிலை ஹோமியோபதி படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

முதுநிலை ஹோமியோபதி படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி உள்ளது. இதில், ஹோமியோபதி பட்ட மேற்படிப்புக்கு, 30 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 5 இடங்களும், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 13 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 12 இடங்களும் உள்ளன.


இவற்றில், மாநில அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குநரகம் நடத்துகிறது. இதற்கு தனித்தனியே விண்ணப்பங்களை https://www.tnhealth.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.