நோய்களின்றி பாதுகாப்பாக வாழ எந்த உணவுகளை உண்ண வேண்டும் ??


மேலை நாடுகளில் ஒருநாளில் 5 முறை உணவை எடுத்துக்கொள்கின்றனர். இந்தியாவில் 3 வேளை மட்டுமே உணவை உண்ணுகிறோம்.ஆவியில் வேக வைத்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. எண்ணெய் வகைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்காகும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் அதிகளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியமான ஒன்றாகும். துரித உணவுகளை உட்கொள்ளுவதால் உடலுக்கு பெரும் கேடு விளைகிறது. முளைகட்டிய பயிர்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை உண்ணுவதால் உடலுக்கு நன்மை உண்டாகும்.