எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!


எஸ்பிஐ அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சுமார் 700 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இதற்கான தேர்வு வரும் அக்டோபர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் தற்போது தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் nsdcindia.org/apprenticeship, apprenticeshipindia.org, bfsissc.com அல்லது bank.sbi/careers உள்ளிட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நாளன்று தேர்வர்கள் தங்களுக்கான நுழைவுச் சீட்டுடன் தேவையான சான்றையும் எடுத்துவர வேண்டும்.