பற்சிதைவை தடுக்கும் கிரீன் டீ


வாயில் உள்ள முக்கியமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிகளைத் தடுப்பதில் கேட்சின்கள் திறனுள்ளவை என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. இந்த பாக்டீரியாக்கள், காறையை உருவாக்கி, பற்சிதைவு, சொத்தை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. கிரீன் டீ, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை உண்பதைத் தடுக்கின்றன.மேலும் பற்சிதைவைத் தடுக்க உதவும் ஃப்ளூரைடும் இதில் உள்ளது. தொடர்ச்சியாக கிரீன் டீ குடித்து வருவதால், பல்லின் நலன் அதிகரிக்கும், சுவாச துர்நாற்றம் குறையும்.