Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 18, 2019

மத்திய அரசுத் துறையில் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு!


மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியான பொறியியல், சட்டம், மருத்துவம் முடித்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 88

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:
பணி: உதவி இயக்குநர் - 13
பணி: சட்ட அலுவலர் - 06
பணி: உதவி இணை இயக்குநர் - 13
பணி: மருத்துவ வல்லுநர் - 56



தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக், சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.25 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்க அறிய https://upsc.gov.in/sites/default/files/Advt-13-2019-Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019