Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 12, 2019

ஆசிரியர்களுக்கு, ஸ்மார்ட் போன் கட்டாயம்


இதன்படி, ஸ்மார்ட் போன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு; புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோவாக பயன்படுத்துதல் போன்ற திட்டங்களும், அமலுக்கு வந்துள்ளன. அதேபோல, மாணவர்களுக்கு நவீன கற்பித்தல் முறையை வழங்க, மத்திய அரசின் சார்பில், &'வீடியோ கான்பரன்ஸ்&' மற்றும் மொபைல் போன் செயலிகள் வழியாக, சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், டிஜிட்டல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, &'சமக்ர சிக் ஷா&' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.