Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 29, 2019

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை சாற்றின் பயன்கள்...!!


எலுமிச்சை ஜூஸில் சிறிது தேன் மற்றும் துளசி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும். இவை பாதிபடைந்த சரும செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.




இதில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கப்படும்.
எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை சாறு குடித்து வந்தால் நல்லது.
தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம்.
உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது.




எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும். எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி, சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்.
ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது.




ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி தர எளிதில் குணமாக்கலாம்.