வாழைப்பூவின் எண்ணற்ற நன்மைகள் என்ன தெரியுமா ??


வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என பலவிதங்களில் வாழைப்பூவினை சாப்பிடலாம். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வாழைப்பூ பயன்படுகிறது. வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூல நோய் குணமாகும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கவும் இது பயன்படுகிறது. தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம், ரத்தசோகை ஆகியவை வராது. வாழைப் பூவினால் குருதி முளை, வெள்ளை, வெறி நோய், உடல் கொதிப்பு, சீதக்கழிச்சல், ஆசனவாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் போன்ற பல நோய்கள் குணமாகும்