Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 6, 2019

சர்க்கரை வியாதிக்கு மருந்தே அதுதான்..!


நாவல் பழக் கொட்டைகளை தூக்கி எறியாதீங்க..

நாவல் பழம், சர்க்கரை வியாதிக்கு பெரிய எதிரியாக விளங்குகிறது. இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாய பயன்படுத்தப்படுகிறது.

நாவல் பழ விதைகள் சர்க்கரை வியாதியை தடுப்பதற்கும், சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதற்கும் மருந்தாக நமது இந்திய ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவமும் பரிந்துரைக்கின்றது.

எவ்வாறு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது?



நாவல் பழக்கொட்டைகளில் இருக்கும் ஜாம்போலைன் மற்றும் ஜாம்போசைன் என்ற இரண்டு வேதிமூலக்கூறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கின்றன.

இதனால்தான் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்து சர்க்கரை வியாதியை முழுவதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

எப்படி சாப்பிடுவது ?

ஸ்டெப்-1 :

நாவல் பழக் கொட்டைகளை அதனுடையை சதைப் பகுதியிலிருந்து முற்றிலும் பிரித்தெடுக்க வேண்டும். அதனை நன்றாக சாப்பிட்டு விட்டு, விதைகளை கழுவிக் கொண்டாலும் சரி.

ஸ்டெப்-2 :

விதைகளை மூன்று நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பின் அவற்றின் மேலிருக்கும் ஓட்டை தட்டினால் உள்ளே பச்சை நிறத்தில் விதைகள் இருக்கும். அந்த பச்சை நிற விதைகளை எல்லாம் கையினாலேயே தட்டி மீண்டும் வெயிலில் காய வையுங்கள்.



ஸ்டெப்-3 :

நன்றாக இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து அதன் பின் அந்த காய்ந்த பச்சை நிற விதைகளை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப்-4 :

இந்த பொடியை ஒரு இறுக்கமான காற்று புகா டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் நாவல் விதைப் பொடியை கலந்து குடித்தால் சர்க்கரை வியாதி முழுக்க முழுக்க நம் கட்டுக்குள் இருக்கும்.