திருச்சியில் ராணுவ பணியிடங்களுக்கு தேர்வு

மதுரை: திருச்சியில் ஜன., 3 முதல் 13 வரை ராணுவ இளநிலை அலுவலர்கள், ஆசிரியர், ஹவில்தார் பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 11 மாவட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். உடல் மற்றும் மருத்துவத்தேர்வு நடக்கும். விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.inல் பதிவிறக்கம் செய்யலாம்.விபரங்களுக்கு தேர்வு அலுவலகத்தை 0422-222 2022ல் தொடர்பு கொள்ளலாம்.