Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 23, 2019

என்சிஇஆர்டி முறையில் தேர்வு இல்லை சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் என்சிஇஆர்டி பாடங் களை அடிப்படையாக கொண்டு நடக்காது.

சிபி எஸ்இ பாடத்திட்டத் தின்படி தான் நடக்கும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத் -. தேர்வும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வும் நடக்கி றது.இந்த தேர்வுகள் என் சிஇஆர்டி தயாரித்துள்ள பாடப் புத்தகங்களை அடிப்படையாக கொண் டுதான் நடக்கும் என்று நாடு முழுவதும் வதந்தி பரவியுள்ளது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்போர் குழப்பத்தில் உள்ளனர்.



இந்த குழப்பத்தை போக்க தற்போது சிபிஎஸ்இ தரப்பினர் மாநில வாரியாக விளக் கம் அளித்து வருகின்றனர். அதன்படி மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத் தின் அடிப்படையில்தான் நடக்கும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. என்சிஇ ஆர்டி பாடங்களின்படி நடக்காது என்றும் தெரி வித்துள்ளனர்.நாட்டின் பல்வேறு இடங்களில் இது போன்ற குழப்ப நிலை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிபிஎஸ்இ, அனைத்து இணைப்புபெற்றுள்ள பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



மேலும் தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையும் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.இந்த பாடத்திட்டத்தை அனைத்து மாணவ, மாணவியரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண் டும் என்றும் தெரிவித்துள் ளது. இந்நிலையில், சுற்ற றிக்கை அனுப்புவதற் கான நேரம் இதுவல்ல. பெரும்பாலான பள் ளிகளுக்கு இந்த தகவல் வந்து சேரவில்லை . அது இணையதளத்தில் மட் டுமே உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சிபிஎஸ்இ நிர்வாகம் இது போன்ற சுற்றறிக்கைகளையோ அல்லது அறிக்கைகளையோ அல்லது தகவல்களையோ பள்ளிக ளுக்கு அனுப்புவதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.