தர்பூசணியின் நன்மைகள் என்ன தெரியுமா ??


நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியினை சாப்பிடுவதால் உடல் வறட்சி குறைகிறது. இதனை தினமும் உண்டால் சிறுநீரக பிரச்னை அல்லது டையூரெட்டிக் பிரச்சனை குறையும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தஅழுத்த பாதிப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. தர்பூசணியை சாப்பிட்டால் உடல் சூடு குறைந்து, குளிர்ச்சி ஏற்படும். சருமத்தில் வெடிப்பு, சரும வறட்சி, சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்சனைகளும் வராமல் இது தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாக சாப்பிடக்கூடாது.