இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 38 இளநிலை பொறியியல் உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இந்த 38 இளநிலை பொறியியல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

இளநிலை பொறியியல் உதவியாளர் - 38 காலியிடம்

கல்வித் தகுதி :

வேதியியல் அல்லது பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. வேதியியல், பி.எஸ்சி. தொழில்துறை வேதியியல் ஆகிய பாடங்களில் எதாவது ஒரு பாடத்தை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

18 வயது முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 11,900 முதல் 32,000 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு - ரூ. 150 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
மற்ற அனைத்து பிரிவினருக்கும் - விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.iocl.com/download/Detailed-Advertisement-for-Recruitment-of-Non-Executive-Personnels-at-Gujarat-Refinery-JR-05-2019.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 30.10.2019