Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 28, 2019

பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்


சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.



உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.



பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும். மிகவும் இறுக்கமான '‌ஷூ' அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.