இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள பொறியாளர் மற்றும் விஞ்ஞானி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 327 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)

மொத்த காலிப் பணியிடங்கள் : 327

பணி மற்றும் பணியிட விபரங்கள் :
Scientist/Engineer - SC (Electronics) - 131
Scientist/Engineer -SC (Mechanical) - 135
Scientist/Engineer-SC (Computer Science) - 58
Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 04.11.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.56,100 மற்றும் கூடுதலாக சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
கட்டணத்தை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவினர்கள் மற்றும் பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.isro.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 12.01.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.