கொசுத்தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ??


டெங்கு, மலேரியா என்று பல நோய்களை கொசு பரப்புகிறது. தேங்கிய நீர் நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், குப்பைத் தொட்டிகள், மூடப்படாத நீர் ஆகியவற்றின் மூலம் கொசுக்கள் பரவுகின்றன. கொசுப்புழுக்களால் நீரில் மூச்சுவிட முடியாது. அவை மூச்சு விட நீரின் மேல் மட்டத்திற்கு வரும். எனவே, கொசுக்களை அழிக்க நீரின் மீது மண்ணெண்ணெய் தெளிப்பதன் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுக்கலாம். வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்றுப் பச்சிலை செடியை வளர்த்தால் கொசு வருவது குறையும். நமது சுற்றுப்புறத்திலுள்ள டயர்கள், தகரங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் நீர் தேங்கும் குட்டைகளிலும் திறந்த வெளிகளிலும் மண்ணெண்ணெய் தெளிப்பதன் மூலம் கொசு பெருகுவதைத் தடுக்கலாம்.