Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 9, 2019

விண்வெளி விநாடி வினா போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு


உலக இயற்கை நிதியம் அமைப்பு சார்பில் நடைபெற்ற விண்வெளி குறித்த விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விண்வெளி குறித்த விநாடி வினா போட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. இதில், 48 பள்ளிகளைச் சேர்ந்த 180 மாணவ, மாணவியர் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான இறுதிப் போட்டி சென்னை அடையாறில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், மாணவர்கள் எஸ்.தருண், ருஷில், மாணவியர் சுப்ரஜா, ஷிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு உலக இயற்கை நிதியம் அமைப்பின் தெலங்கானா தலைமை அதிகாரி ஃபரீதா தாம்பால் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.


இதுகுறித்து உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் எஸ்.சரவணன் கூறுகையில், தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவிலான விநாடி, வினா போட்டிகள் நடைபெற்றுள்ளன. 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு புதன்கிழமை (அக். 9) முதல் சனிக்கிழமை (அக். 12) வரை ஆன்லைன் மூலம் விநாடி, வினா போட்டி நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் அக்டோபர் 19, 20 தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ள விநாடி, வினா போட்டிக்குத் தகுதி பெறுவர் என்றார். இந்த விநாடி வினா போட்டிக்கான இயற்கை கல்வி அலுவலர் வித்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.