பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் ஸ்மார்ட் பலகைகள்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


சென்னை: பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் ஸ்மார்ட் பலகைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். அடுத்தவாரம் இறுதிக்குள் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் இன்டர்நெட் வசதி செய்து தரப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.