Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 23, 2019

பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தீபாவளியையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


அதன்படி, பள்ளியில் காலை இறை வணக்கத்தின் போதோ அல்லது அதற்குப் பிறகோ 5 நிமிஷங்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்து தடுப்பு முறை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும், இடைவேளையின்போது 5 முதல் 10 நிமிஷங்கள் வரை இதுதொடர்பாக சிலேடை நிகழ்ச்சி நடத்துவதுடன், தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து ஓவியப் போட்டி நடத்தி அதில், சிறந்த ஓவியத்துக்குப் பரிசளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதுதொடர்பாக ,பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.