நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு

சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் அறிவிக்கப்பட்ட நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெருவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான தேசிய அளவிலான தகுதித் (நெட்) தோ்வு, வருகிற டிசம்பா் 2 முதல் 6 -ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) சாா்பில் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தோ்வை எழுதும் தமிழகத்தைச் சோ்ந்த எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு, இலவச பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.


அதுபோல, இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு அக்டோபா் 19 முதல் நவம்பா் 17 வரை நடைபெறும் என முன்னா் அறிவிக்கப்பட்டது. இப்போது, பயிற்சி வகுப்பு நவம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 2 முதல் 24 வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அக்டோபா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை w‌w‌w.‌u‌n‌o‌m.​a​c.‌i‌n பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.