கூட்டுறவு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், ளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 300 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 300

பணியிட விபரம் :மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 176 பணியிடங்களும், கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 57 காலியிடங்களும், கூட்டுறவு விற்பனை இணையத்தில் 58 காலியிடங்களும் உள்ளது. இதே போல், இளநிலை உதவியாளர் பணிக்கு கூட்டுறவு ஒன்றியத்தில் 6 பணியிடங்களும், நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் 3 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

(எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.)

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருப்பதோடு கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக மேல்நிலைப் படிப்பு, பட்டப்படிப்பின் போது தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருத்தல் அவசியம். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tncoopsrb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.