பப்பாளி விதையின் பயன்கள்


பப்பாளி பழத்தில் இருக்கும் விதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சில நன்மைகள் உண்டு., அதனை பற்றி இந்த செய்தியில் காண்போம். தினமும் 2 தே.கரண்டி பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல மருத்துவ குணங்கள் கிடைக்கிறது., பப்பாளி மற்றும் தேனில் இருக்கும் சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலமாக வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.இந்த முறையானது இயற்கையான சிறந்த முறை என்ற காரணத்தால்., உடலுக்கு தீங்கு ஏற்படும் உடல்நலக்குறைவு பிரச்சனையை தவிர்ப்பதற்கு பப்பாளிப் பழத்த்தின் விதையை தேனில் கலந்து சாப்பிட வேண்டும். பப்பாளி பழத்தின் விதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை குறையும்.