Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 26, 2019

TNPL 2019: ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.! உடனே விண்ணப்பிக்கவும்..!


தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள எனர்ஜி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.42 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : எனர்ஜி ஆபரேட்டர்

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnpl.com

பணி விபரம் : எனர்ஜி ஆபரரேட்டர் பணிக்கு டி, சி, பி என மொத்தம் மூன்று விதமான பதவிகள் உள்ளது.



கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பிட்டர் / எலெக்ட்ரீசியன் / இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எக்டிசி படிப்பு முடித்திருக்க வேண்டும். தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு :

பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு தரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

(அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழு தகவல் உள்ளது.)

பணி அனுபவம் : செமி ஸ்கில்டு டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதே போல் சி மற்றும் பி பணியிடத்திற்கு 10 முதல் 15 வருடம் பணி அனுபவம் அவசியம்.

ஊதியம் :
எனர்ஜி ஆபரரேட்டர் டி பிரிவுக்கு - மாதம் ரூ. 31,788
சி பிரிவுக்கு - மாதம் ரூ.40,982
பி பிரிவுக்கு - மாதம் ரூ.42,320

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

CHIEF GENERAL MANAGER-HR

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED

KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

(விண்ணப்பத்தை அனுப்பும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்லவிச்சான்றிதழ், ஆதார் கார்டு, மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ், ஊதிய நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.)