இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விபரம் - 07.11.2019

நமது வழக்கினை விசாரிக்கும் நீதியரசர் தற்போது 2013 முதல் 2017 வரை உள்ள வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக 2013- ல் தொடுக்கப்பட்ட வழக்குகளும் தற்போது 2014 -வழக்குகளும் மட்டுமே இறுதிவிசாரணை வருகிறது நமது வழக்கறிஞர்கள் 2017-ல் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்கள்.
ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை தற்போதை நீதியரசர் இன்னும் 15 வேலை நாட்கள் மட்டுமே இங்கு இருப்பார்.... பின்னர் வழக்கமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதியரசர்கள் மாற்றப்படுவார்கள். டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் புதிய நீதியரசர் வழக்கினை விசாரிப்பார்கள்.ஒவ்வொரு நீதியரசர்கள் ஒவ்வொரு விதமான வகையில் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். எனவேதான் இரண்டு மாதங்களாக நமது வழக்கு விசாரணை பட்டியலில் இடம் பெறவில்லை.. அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் நமது இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை மீண்டும் துரிதப்படுத்தப்படும்.
தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு