Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 27, 2019

10-வது தேர்ச்சியா? அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றலாம் வாங்க!


மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 92

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

உதவி பாதுகாப்பு அதிகாரி

காலியிடங்கள் : 19

பாதுகாவலர்

காலியிடங்கள் : 73

வயது வரம்பு : 06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : உதவி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.




விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.barc.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.barc.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.