அரசு கல்லூரிகளிலௌ 1,146 கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வசூல் வேட்டை - தினமலர் டீகடை பெஞ்சு

''அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற கவுரவ விரிவுரையாளர்கள்ல,1,146 பேரை, விதிகளை மீறி, பணி நிரந்தரம் செய்றதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு... இதுக்காக, தலைக்கு, 30 லட்சம் ரூபாய் வசூலிக்கிறாங்க பா... ''செங்கல்பட்டு, ஊட்டி அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற, சில கவுரவ விரிவுரையாளர்கள் தான், இதுக்கு புரோக்கர்கள் மாதிரி செயல்பட்டு, பணத்தை வசூல் பண்ணி, மேலிடம் வரைக்கும் சேர்க்கிறாங்க...இதுக்காக, போன வாரம், சேலத்துல ஒரு தனியார் மண்டபத்துல, கவுரவ விரிவுரையாளர்கள் ஆலோசனைக் கூட்டமே நடந்திருக்கு பா...''சீக்கிரமே இதுக்கான அரசாணை வரப்போகுதுன்னு சொல்றாங்க... இது பத்தி, உயர்கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டா, மழுப்பலா பதில் சொல்லி,போனை வச்சிடுறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.