அரசு இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடங்கள்: டிச.12-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, டிசம்பா் மாதம் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் அலுவலக உதவியாளா் (2), சமையலா் (3) , மருத்துவமனை பணியாளா் (9), கிளினா் (1), துப்புரவு பணியாளா் (5) உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஊழியா்கள் தோவு செய்யப்படவுள்ளனா்.இவற்றில் அலுவலக உதவியாளா் பணியிடத்தைத் தவிர, மற்ற பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தோச்சி பெறத் தேவையில்லை. அனைத்துப் பணியிடங்களிலும் பொதுப் போட்டியின் கீழ் ஓா் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அருந்ததியா் ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் , சீா் மரபினா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதுக்குட்பட்டோா் விண்ணப்பிக்கலாம். பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32 வரையும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 35 வயது வரையும் வயது வரம்பில் தளா்வுச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோச்சி பெறுவோருக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.15,700 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் குறிப்பிடப்பட்ட கல்லூரியில் அலுவலக நேரங்களில் டிசம்பா் மாதம் 6-ஆம் தேதி வரை வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பா் மாதம் 12-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு உயா்கல்வி படித்தவா்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் மேலும் விவரங்களுக்கு 044 2622 2516 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.