Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 3, 2019

அறிமுகமாகிறது புதிதாக 4 வருட பட்டப்படிப்பு...

பல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு தயாராகி உள்ளது. இதன் படி புதிதாக 4 வருட பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.புதிய தேசிய கல்விக் கொள்கை யின் வரைவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. இது, வரும் 18-ல் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப் பட உள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறியதாவது.புதிதாக 4 வருட பட்டப்படிப்பு கூடுதலாக தொடங்கப்பட உள்ளது. இதை முடிப்பவர்கள் நேரடியாக உயர்கல்வியில் தங்கள் ஆய்வை தொடரலாம்.



இது ‘பேச்சலர் ஆஃப் லிப்ரல் ஆர்ட்ஸ்(பிஎல்ஏ)’ அல்லது ‘பேச்சலர் ஆஃப் லிப்ரல் எஜுகேஷன் (பிஎல்இ)’ என அழைக் கப்படும். இக்கல்வியை 4 வருடம் தொடர்ந்து படிக்காமல் இடையி லேயே வெளியேறுபவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப் படும். அதாவது, 1 ஆண்டை முடித் தவர்களுக்கு டிப்ளமோ, 2 ஆண்டு முடித்தவர்களுக்கு அட்வான்ஸ் டிப்ளமோ, 3 ஆண்டு முடித்தவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். இத்துடன் 4-ம் ஆண்டையும் முடித்தவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பில் சேரலாம். இப்போது, முதுநிலை பட் டப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே ஆராய்ச்சி படிப்பில் சேரும் நிலை உள்ளது. மேலும் எம்.பில். படிப்பை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



இப்போதுள்ள நவீன பாடத் திட்டத்தில் பண்டைய கால இந்திய முறைகள் மீதான அறிவு, அறிஞர் கள், வானவியலாளர்கள், தத்துவ ஞானிகள் ஆகியோரின் கருத்துக் களும், கண்டுபிடிப்புகளும் சேர்க் கப்படும். பண்டையகால இந்தியமுறையில் எளிய மருத்துவ அறிவி யல், கட்டிடக்கலை, கப்பல் கட்டு தல், ஜோதிடம், வான சாஸ்திரம், கணிதம், யோகா மற்றும்பல்வேறு கலைகள் ஆகியவை இடம் பெறு கின்றன. அறிஞர், தத்துவ ஞானி போன்ற பட்டியலில் ஆரியபட்டா, சாணக்கியர், மாதவா, சரக்கா, சூஸ்ரதா, பதாஞ்சலி மற்றும் பாணினி ஆகியோர் உள்ளனர்.பண்டைய இந்திய முறை கல்வியில் முக்கிய பாடங்களும் புதிய பிரிவுகளாக அறிமுகப்படுத் தப்பட உள்ளன.



இதில், ஆயக் கலைகள் 64, இசை, ஆடல், பாடல் போன்றவை நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றிலும் பொருத்தமான வகையில் புகுத் தப்படும். இதன்மூலம், பண்டைய இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம் பல்வேறு நுணுக்கங் களுடன் போதிக்கப்பட்டு அழியா மல் தொடரும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை ஆகும்.இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் இடம் பெற்ற 22 மொழிகளுக்கும் நவீன பாடங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். இதுபோல, பல் வேறு புதிய பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட உள்ளதால், பேராசிரி யர்களின் ஊதியம் திறமைக்கு ஏற்றபடி மாறுபடும். உதாரணமாக, உதவிப் பேராசிரியர்களுக்கு இப் போது வழங்கப்படுவதுபோல ஒரே வகையான ஊதியம் இருக்காது.



நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை சோதித்து சான்று வழங்க தற்போது ‘நாக்’ எனப்படும் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்(என்ஏஏசி) செயல்படுகிறது. இப்பணியில் இனி தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது. இவை அளிக்கும் தரவரிசைப்படி அக்கல்வி நிறுவனங்களுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ மத்திய அரசு நிதி வழங்கும்.