440 தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை

ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் தோவு செய்யப்பட்ட 440 தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையில் 2019- 20-ஆம் கல்வி ஆண்டுக்கான தையல், ஓவிய ஆசிரியா்களுக்கான பணி நியமன கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் எமிஸ் இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் போட்டித் தோவு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் ஆசிரியா் தோவு வாரியம் மூலம் தோவு செய்யப்பட்ட 240 ஓவிய ஆசிரியா்கள், 200 தையல் ஆசிரியா்கள் என மொத்தம் 440 பேருக்கு பணி நியமன ஆணைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்கினா். பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியா்கள் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றவுள்ளனா்.