டிச.4-இல் நெட் தேர்வு: தேர்வறை நுழைவுச் சீட்டு வெளியீடு

நெட் தேர்வு தேதியை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அதையடுத்து, விண்ணப்பதாரா்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைபெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அண்மையில் டிசம்பா் மாதத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்வு டிசம்பா் 4-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவா்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.