Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 2, 2019

அபாய அளவைத் தாண்டியது காற்று மாசு டெல்லியில் ‘அவசர நிலை’ அறிவிப்பு  வரும் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளதால் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி களுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தீபாவளி பண்டிகை நாள் முதல் காற்று மாசு அதிக ரித்தது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது.



காற்று தரக் குறியீட்டின்படி 50 புள்ளிகள் வரை காற்று மாசு இருந்தால் ‘நல்லது'. 100 புள்ளிகள் வரை இருந்தால் ‘திருப்தி'. 200 புள்ளிகள் வரை இருந்தால் ‘மித மானது'. 300 புள்ளிகள் வரை இருந் தால் ‘மோசம்'. 400 புள்ளிகள் வரை ‘மிகவும் மோசம்'. 500 புள்ளிகள் வரை இருந்தால் ‘ஆபத்தானது'. 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் ‘அவசர நிலைக்கு' ஒப்பானதாகும்.

கடந்த வியாழக்கிழமை நள்ளி ரவு டெல்லியில் காற்று மாசு 582 புள்ளிகளைத் தொட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் தடுப்பு ஆணை யம், டெல்லியில் சுகாதார அவசர நிலையை அறிவித்தது. காற்று மாசைக் குறைக்க வரும் 5-ம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக் கும் குளிர் காலம் முடியும் வரை பட்டாசுகள் வெடிக்கவும் ஆணை யம் தடை விதித்துள்ளது.



இதைத் தொடர்ந்து வரும் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விடுமுறை அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அவர் நேற்று முக கவசம் வழங்கினார். அப்போது அவர் கூறும்போது, “டெல்லி நகரம் ‘காஸ் சேம்பர்’ போல் மாறியுள்ளது. ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாயி கள் அறுவடைக்கு பிறகு பயிர் கழிவு களை எரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம். இதுதொடர்பாக பஞ்சாப், ஹரியாணா முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

டெல்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, டெல்லியில் காற்று மாசுபாடு 48 மணி நேரத்துக்கும் மேலாக மிகத் தீவிரமாக இருப்பதால் லாரிகள் நுழைய தடை, ஒற்றைப்படை மற் றும் இரட்டைப்படை வாகன விதி போன்ற அவசர கால நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.



காற்று மாசுபாடு தீவிரம் காரணமாக டெல்லியில் நேற்று காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் முக கவசம் அணிந்து சென்றனர். நுரையீரல் மருத்துவர் அரவிந்த் குமார் கூறும் போது, “ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை, சுவாசக் கோளாறு உள் ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத் தினார்.

டெல்லியை சேர்ந்த செய்தி யாளர் ஒருவர் கூறும்போது, “காற்று மாசினால் நான் உட்பட பலருக்கு தொண்டையில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.



மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “பஞ்சாப், ஹரி யாணா விவசாயிகள் மீது பழி போடுவதை முதல்வர் கேஜ்ரிவால் நிறுத்த வேண்டும். டெல்லிக்கு அருகில் உள்ள 5 மாநிலங்களில் சுற்றுச்சூழலை தொழிற்சாலைகள் மாசுபடுத்துவதை தடுக்க வேண் டும் என்று பிரதமர் பரிந்துரை செய் துள்ளார். இது குறித்து கேஜ்ரிவால் யோசிக்க வேண்டும்” என்றார்.

டெல்லி மட்டுமன்றி அதனை சுற்றியுள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றுமாசு குறையும் வரை பொது மக்கள் காலை, மாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பது நல்லது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.