அண்ணா பல்கலைக்கழகத்தின் 6 மாத இலவச தொழில்நுட்ப பயிற்சி!


ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் சர்வீச் தொழில்நுட்ப 6 மாத இலவச படிப்பை அண்ணா பல்கலைக்கழகம்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு மையம்‌ மற்றும்‌ தென்சென்னை ரோட்டரி சங்கம்‌ இணைந்து வழங்குகிறது. ஏழை மாணவர்கள்‌ "ஆண்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ இதில்‌ சேர்ந்து படிக்கலாம்‌.
படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள்‌ 8ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. நேர்முகத்‌ தேர்வின்‌ அடிப்படையில்‌ இடம்‌ அளிக்கப்படும்‌. 60 மாணவர்கள்‌ இந்த படிப்பில்‌ சேர அனுமதிக்கப்படுவார்கள்‌.

நவம்பர்‌ 2019ல்‌ தொடங்கும்‌ இந்த பயிற்சி வகுப்பு ஏப்ரல்‌ 2020ல்‌ முடிவடையும்‌.வகுப்புகள்‌ திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை மாலை 6 மணி முதல்‌ இரவு 8 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில்‌
நடைபெறும்‌.
விண்ணபங்கள்‌ சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்‌ 22.11.2019

மேறும்‌ விபரங்களுக்கு
தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு மையம்‌
0மட்கட்டிடம்‌ , கிண்டி பொறியியல்‌ கல்லூரி ,
அண்ணா பல்கலைக்கழகம்‌,
சென்னை- 600 025
தொலைபேசி : 044 - 2235 8601
Email: dire_ced@annauniv.edu