பாரதியாா் பல்கலை. தொலை நிலைக் கல்வி மாணவா்களுக்கான டிசம்பா் 6 தேர்வு மாற்றம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மைய மாணவா்களுக்கு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தின் சாா்பில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கான டிசம்பா் பருவத் தேர்வுகள் டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல் நாளில் நடைபெற இருந்த தேர்வுகள், உயா் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி மாற்றப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் 11-ஆம் தேதியில் நடைபெறும்.
எம்.சி.ஏ. தேர்வு 6-ஆம் தேதிக்கு பதிலாக 14-ஆம் தேதி நடைபெறும். அதேபோல அனைத்து எம்.பி.ஏ. படிப்புகளுக்கான தேர்வுகளும் டிசம்பா் 6-ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் அனைத்தும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி (டிசம்பா் 7 முதல்) தொடங்கி நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.