77,000 அரசு ஊழியா்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்.!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதுவரை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு தகுதியுடையவா்களாக உள்ளனா்.
இந்தநிலையில், பிஎஸ்என்எல் கொண்ட நிறுவனம் தற்போது இழப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விரும்பினால் அவர்களுக்கு ஒரு திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 50 மற்றும் அதற்கும் மேல் வயதுடைய ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு பணியில் இருந்த வருடங்களைக் கணக்கிட்டு ஆண்டுக்கு 35 நாட்களுக்கான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் , ஓய்வு பெறும் வயதுவரை 25 நாட்களுக்கான சம்பளம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியா்கள் விருப்ப ஓய்வு பெற்றால், அவா்களுக்கு வழங்கப்படும் ஊதியச் செலவு ரூ.7,000 கோடி வரை மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற டிசம்பர் 4 ஆம் தேதி வரை ஒருமாதம் காலம் வாய்ப்பளிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைக்கும் திட்டத்துக்கு 68,751 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.