8, 12-வது தேர்ச்சியா? ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைகள்!


திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (ஆவின்)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் :

மேலாளர் -6, இணை மேலாளர் - 6, E.O -2, ஜூனியர் எக்ஸிக்யூடிவ் 1, ஓட்டுநர் -2, டெக் (பாய்லர்) -1, SFA - 33 என காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களில் இட ஒதுக்கீடு பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள்:

சந்தைப்படுத்துதல், இன்ஜினியரிங், P&I ஆகிய பிரிவுகளில் மேலாளர் பதவிகள் உள்ளது. மேலும், இணை மேலாளர், E.O, ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ், ஓட்டுநர், டெக்னிக்கல் (பாய்லர்), SFA உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

இப்பணியிடங்களுக்கு 8, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பி.இ, பி.டெக், எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.




மேலாளர், இணை மேலாளர், E.O, ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும் ஓட்டுநர் பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டெக் (பாய்லர்) பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், பாய்லர் அட்டெண்டன்ட் சான்றிதழ் படிப்பும் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு:

மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர், டெக் (பாய்லர்), SFA ஆகிய பணிக்கு SC, SCA, ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் MBC, DNC, BC பிரிவினர் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சவயது வரம்பு கிடையாது.




ஊதியம் :-
மேலாளர் (P&I) - ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரையில்
மேலாளர் இன்ஜினியரிங், மார்கெட்டிங் - ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
இணை மேலாளர் மார்கெட்டிங் - ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்
இணை மேலாளர் டெய்ரி - ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
இணை மேலாளர் (DC) - ரூ.35,600 முதல் ரூ.1,12,800 வரையில்
E.O கிரேடு II - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
டெக் (பாய்லர்) - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
SFA - ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.




விண்ணப்பிக்கும் முறை:-

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்துடன் புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், அடையாள அட்டை நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2019 டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250 ரூபாய்
SC/SCA/ST விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100

தேர்வு முறை:-

எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Tiruchirappalli District Cooperative Milk Producers' Union Limited,

Pudukkottai Road, Kottapattu,Tiruchirappalli - 620 023.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.aavinmilk.com என்னும் லிங்க்கை காணவும்