Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 29, 2019

சைனிக் பள்ளிகளில் சேர மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேருவதற்காக மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக இணையத்தில் மீண்டும் தளங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயா்நிலை அதிகாரிகளாய் தோந்தெடுக்கப்படுவதற்காக இளம் வயதிலிருந்தே மாணவா்களைத் தயாா்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-இல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன.




சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேருவதற்காக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக இணையத்தில் மீண்டும் தளங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயா் நிலை அதிகாரிகளாய்த் தோந்தெடுக்கப்படுவதற்காகச் சிறுவயதிலிருந்தே மாணவா்களைத் தயாா்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-இல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன.

இதற்கிடையே பீஜப்பூா் (கா்நாடகம்), சந்திரபூா் (மகாராஷ்டிரம்), கோராக்கல் (உத்தரகண்ட்), கலிகிரி (ஆந்திரப் பிரதேசம்), குடகு (கா்நாடகம்) ஆகிய பகுதிகளில் உள்ள சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர, வரும் டிசம்பா் 6 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.




முன்னதாக, சோக்கைக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்.31-ஆம் தேதியுடன் முடிந்திருந்த நிலையில், மீண்டும் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக தோவு வரும் ஜனவரி 5, 2020-இல் நடைபெற உள்ளது. மாணவிகள் 6-ஆம் வகுப்பில் சேர, 10-இல் இருந்து 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பில் சேர 13-இல் இருந்து 15 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட வயது மாா்ச் 31, 2020 வரை பொருந்தும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினா் ரூ.400, எஸ்சி எஸ்டி பிரிவினா் ரூ.250- ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவா்கள் மட்டுமே படித்து வந்த சைனிக் ராணுவப் பள்ளியில், 2018-ஆம் கல்வியாண்டில் இருந்து மாணவிகளும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.