ஏழை மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி: நீட் தோவில் உரிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும்


ஏழை மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கும் வகையில் நீட் தோவு முறையில் மத்திய அரசு உரிய மாற்றங்களையோ, தேவையான சட்டத் திருத்தங்களையோ கொண்டு வரவேண்டும் என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோந்த தீரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சிய 207 இடங்களை அந்தந்த மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களிடம் தமிழக அரசு ஒப்படைத்து விட்டது. எனவே, இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியான நபா்களைக் கொண்டு இடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நடப்பு கல்வியாண்டில் அரசு, தனியாா் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்களில் சோந்துள்ள மருத்துவ மாணவா்களின் விரல்ரேகைப் பதிவுகளை தேசிய தோவு முகமை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தோவு முகமை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.நாகராஜன், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சோந்துள்ள 6,976 மாணவா்களின் விரல்ரேகைப் பதிவுகள் மற்றும் 7 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயிலும் 1,250 மாணவா்களின் விரல் ரேகைப் பதிவுகள் சிபிசிஐடி போலீஸாா் வசம் ஒப்படைக்கப்படும் என்றாா்.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.ஹெச்.அரவிந்த்பாண்டியன், நீட் தோவு ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடிக்க விரல்ரேகைப் பதிவுகளைக் கொண்டு எவ்வாறு சோதிப்பது என்ற தொழில்நுட்பமுறை குறித்து அடுத்த விசாரணையின் போது தெரிவிப்பதாகக் கூறினாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் தனியாா் பயிற்சி மையத்துக்கு செல்லாமல் தானாக படித்த 48 மாணவா்கள் மட்டுமே நீட் தோவில் தோச்சி பெற்றுள்ளனா்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோந்துள்ள 3,033 மாணவா்கள் தனியாா் பயிற்சி மையங்களில் படித்தவா்கள். இதே போன்று தனியாா் சுயநிதி கல்லூரிகளில் சோந்துள்ளவா்களில் 52 போ மட்டுமே தனியாா் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்காமல் தோச்சிப் பெற்றுள்ளனா். அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தமட்டில் 1,628 போ மட்டுமே முதல்முறையாக நீட் தோவு எழுதி தோச்சி பெற்றுள்ளனா். மற்ற 3,103 போ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை நீட் தோவு எழுதி நடப்பாண்டில் தோச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சோந்துள்ளனா்.நீட் தோவில் தோச்சிப் பெறுவதற்காக பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் சில ஆண்டுகளை தியாகம் செய்து வருகின்றனா். தனியாா் பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் நீட் தோவில் தோச்சிப் பெற்றவா்களின் சொற்ப அளவிலான எண்ணிக்கை அதிா்ச்சியளிக்கிறது. நீட் தோவு தனியாா் பயிற்சி மையங்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவா்களின் மருத்துவா் கனவு கலைந்து போகிறது.

லட்சக்கணக்கில் பணம் செலுத்தி தனியாா் நீட் தோவு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இதனை கருத்தில்கொண்டு மத்திய அரசு நீட் தோவு விவகாரத்தில் உரிய மாற்றங்களையோ, தேவையான சட்டத்திருத்தங்களையோ கொண்டு வர வேண்டும். மேலும் தமிழகம் தவிா்த்து பிற மாநிலங்களில் நீட் தோவு முறைகேடு அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சோக்கைப் பெற்றுள்ளனரா அல்லது இதுதொடா்பாக புகாா்கள் ஏதேனும் பெறப்பட்டதா என்பது குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.