வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க காரணம், தங்களுடைய குழந்தைகள் ஆங்கிலத்தில் நன்றாக பேசும் பயிற்சி வரும் என்பதுதான். அது உண்மையும் கூடஅரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் மாஸ்டர் டிகிரி முடித்தாலும் ஆங்கிலத்தில் பேச திணறுவார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த ஆறாம் வகுப்பு மாணவர் கூட சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள்

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 40 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.