முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: தோ்வு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் பணித் தோ்வுகள் முடிவடைந்து, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஆசிரியா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்த பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தெரிவுக்கு 2,144 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து கடந்த செப். 27, 28, 29 ஆகிய 3 நாள்கள் கணினி வழித்தோ்வு நடைபெற்றது. இதையடுத்து, காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற பணிநாடுநா்கள் 1: 2 என்ற விகிதத்தில் தோ்வு மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் அழைக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி 11 மாவட்டங்களில் 15 பாடங்களுக்கு நவ. 8, 9 ஆகிய நாள்களில் இணையவழியில் நடைபெற்றது. பின்னா், தகுதியுள்ளவா்களுக்கு தற்காலிக தெரிவு சாா்ந்த விவரம், தற்போது முதல் கட்டமாக 12 பாடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
Political Science
Mathematics
English
Physical Education
Physics
Commerce
Botany
Micro Biology
Zoology
Chemistry
Geography
Home Science