Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 29, 2019

மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை



பருவநிலை மாற்றம் காரணமாக பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பனிப்பாறைகள் உருகுகின்றன. கடந்த 140 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை, 2019 அக்டோபரில் பதிவாகியுள்ளது.அமெரிக்காவின் மேரிலேண்ட்டை தலைமையகமாக கொண்டு 'தேசிய கடல் மாற்றும் வானிலை நிர்வாகம்' (என்.ஓ.ஏ.ஏ.,) செயல்படுகிறது. இது 1880, முதல் வெப்பநிலையை பதிவு செய்கிறது. 2019 அக்டோபரில், உலகளவில் நிலம் மற்றும் நீர் ஆகிய பகுதிகளில் பதிவான வெப்பநிலையை பதிவு செய்து ஒருங்கிணைத்து ஆய்வு நடத்தியது.



இதன்படி கடந்த140 ஆண்டுகளில், இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக, '2019 அக்டோபர்' மாறியுள்ளது என தெரிவித்துள்ளது. இருபதாம் நுாற்றாண்டில் பதிவான சராசரி வெப்பநிலை அளவு 57.1 டிகிரி பாரன்ஹீட் (14 டிகிரி செல்சியஸ்). இதைவிட கூடுதலாக 1.76 டிகிரி பாரன்ஹீட் (0.98 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை, '2019 அக்டோபரில்' பதிவாகியுள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் அதிகபட்ச 'அக்டோபர் வெப்ப நிலை' 2015 அக்டோபரில் பதிவானது. இதை விட 0.11 டிகிரி பாரன்ஹீட் (0.06 டிகிரி செல்சியஸ்) வெப்பம் குறைவாக 2019 அக்டோபரில் பதிவானது. ஆர்டிக் பகுதியின் பனிக்கட்டிகள் உருகும் சதவீதமும் 1979ம் ஆண்டுக்குப்பின், 2019 அக்டோபரில் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2003ல் இருந்து 'டாப் - 10' அதிகபட்ச அக்டோபர் வெப்ப நிலையில், 'டாப் - 5' கடந்த 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019ல் பதிவாகியுள்ளது.



எங்கு அதிகம் என்.ஓ.ஏ.ஏ., வெளியிட்ட தகவலின் படி, தென் ஆப்ரிக்கா, பசிபிக் பெருங்கடல், ஆர்டிக் ஆகிய பகுதிகளில் சராசரியை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதி, நார்வே மற்றும் தென் அமெரிக்காவின் தென்பகுதி ஆகியவை சராசரியை விட, குளிர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. ---பட விளக்கம்2019 அக்டோபரில் உலகளவில் பதிவான வெப்பநிலை* மிக அதிக குளிர்* சராசரியை விட அதிக குளிர்* சராசரியை விட குளிர்* சராசரி அளவு* சராசரியை விட வெப்பம்* சராசரியை விட அதிக வெப்பம்* மிக அதிக வெப்பம்